நித்திய பூசை நேரம்:
சாதாரண நாட்களில்
காலை 6.00 மணி
பகல் 11.00 மணி
மாலை 5.00 மணி
உற்சவ காலங்களில் பூசை நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.

 

தினசரி மூன்று காலப்பூசைகளும் வெள்ளிக்கிழமை தோறும் பஜனை வழிபாடுகளும், மாதாந்த விஷேச தினங்களும், நவராத்திரி, திருவெம்பாவை, நடேசர் அபிஷேக தினங்கள் ஆறும், ஆனி உத்தர தினத்தைத் தீர்த்தமாகக் கொண்டு முன்பு 9 நாட்கள் கொடியேற்றத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றது.

பூசகர் விபரம்

கோயில் ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரையும் நா. விஸ்வநாதசாஸ்திரியார் மரபினர்களே வம்சாவழி முறையாகப் பூசையைச் செய்து கொண்டு வருகிறார்கள். அக்காலத்தில் 1878ல்

1. சித்திரை – வைகாசி – சு. நாராயணக்குருக்கள்
2. ஆனி – கார்த்திகை – க. திரியம்பகக்குருக்கள்
3. ஆடி – ஐப்பசி – க. கணேசக்குருக்கள்
4. ஆவணி – புரட்டாதி – வி. கணபதிக்குருக்கள்
5. மார்கழி – பங்குனி – க. சுப்பிரமணியக்குருக்கள்
6. தை – மாசி – சி. சிவகடாட்சக்குருக்கள்

என்போர் பூசகர்களாயிருந்தர்ர்கள். இவர்கள் யாவரும் நா. விஸ்வநாதசாஸ்திரியார் மரபினரேயாகும். இவர்களும் இவர்கள் மரபினரிற் சிலரும் காலம் செல்லச்செல்ல பூசையைக் கைவிட வேண்டியவர்களாகிப் பிற இடங்களிற்குச் சென்றனர். சிலர் தற்போது வேறிடங்களில் இருக்கின்றனர். தற்போது கோயிற்பூசை 12 மாதமும் க. சிவசுப்பிரமணியக்குருக்கள், சி. சிவகணேசக்குருக்கள்,  சி. ஸ்ரீகோபாலக்குருக்கள் மரபினரால் செய்யப்பெற்று வருகின்றது.

திருவிழா

முதன் முதல் ஆரம்பம் 1864ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று, 1888 – 1898ல் நிறுத்தப்பட்டு, பின்பும் 1915 வரை நடைபெற்றது. பின்பும் சில காலம் நிறுத்தப்பட்டு இருந்தது. 1926ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின் இரண்டு மூன்று வருடம் நடைபெற்று பின்பு நிறுத்தப்பட்டது. 1965ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின் 1966ம் ஆண்டு தொடக்கம் திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வந்தது. 1984 – 1987 நிறுத்தப்பட்டு 1988ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாகத் திருவிழா நடைபெற்று வருகின்றது.